கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள உணவுபாதுகாப்பு மசோதாவை பார்லிமென்ட்டில் பாஜக எதிர்க்காது என பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

உணவுப் பாதுகாப்பு மசோதா பார்லிமென்ட்டில் நிலுவையில் இருக்கும்போது திடீரென இதற்காக அவசரசட்டத்தை மத்திய அரசு பிறப்பித்தது. இதற்கு ஜனாதிபதியும் ஒப்புதல் தந்தார் . மத்திய அரசின் இந்நடவடிக்கைக்கு பெரும்பாலான எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன.

இந்நிலையில் பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் செய்தியாளர்களிடம் தெரிவத்ததாவது , வரும் மழைக்கால பார்லிமென்ட் கூட்டத்தொடரில் உணவு பாதுகாப்பு மசோதாவை நாங்கள் எதிர்க்கமாட்டோம். ஆனால் சில திருத்தங்களை கொண்டுவர வலியுறுத்துவோம். இம் மசோதாவுக்காக அவசரசட்டம் கொண்டுவரவேண்டிய அவசியம் இல்லை. ஜனநாயகத்தில் இது மிகப்பெரிய கூத்தாக இருக்கிறது. பார்லிமென்ட் முடங்கிப்போவதற்கு காங்கிரஸ் கட்சிதான் காரணமே_தவிர எதிர்க்கட்சிகள் அல்ல என்றார்.

Tags:

Leave a Reply