கரை படிந்த கைகளில் சிக்கி சிதையும் இந்து கோவில்கள் மதம் அரசியலில் தலையிடக் கூடாது என்பதுதான் செக்யூலரிஸம் என்கிறார்கள். சரி ஆனால், ஹிந்துக்களின் கோவில் நிர்வாகத்தில் மட்டும் அரசு தலையிடலாமா ?

தமிழகத்தின் அறமில்லாத் துறை, ஜலகண்டீஷ்வரர் கோவிலை விழுங்கி ஏப்பம் விட்டதை எதிர்த்து போராடிய திரு வெள்ளையப்பன் அவர்கள் தேச விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டது அனைவருக்கும் தெரியும். இந்த போராட்டத்திற்கு பிறகும் அடங்காமல், தன் கோரப் பார்வையை நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலை நோக்கி திருப்பியிருக்கிறது அறமில்லா துறை. அப்படி என்னதான் பணியாற்றுகிறது இந்த துறை ? இந்த அறமில்லாத துறையின் செயல்பாடுகளை குறித்து இந்த பதிவில் நாம் பார்ப்போம்.

இன்று தமிழ்நாடு அறநிலயத்துறையின் வசம் உள்ள கோவில்கள், மடங்கள் மற்றும் இதர சொத்துக்கள் பின்வருமாறு.

4,78,545 ஏக்கர் நிலம். 22, 599 கட்டிடங்கள், 33,627 காலி இடங்கள் ஆகியன. இந்த காலி இடங்கள் மட்டும் 29 கோடி சதுர அடி பரப்புள்ளது. (குறைவாக மிதிப்பிட்டாலே 6000 கோடி ரூபாயை தாண்டும்)

இந்த மிகப்பெரும் சொத்திற்கு அறநிலயத்துறை வெறும் 304 கோடி ரூபாய்தான் வாடகையாக பெற்றுள்ளதாக சொல்கிறது. அதில் வெறு 36 கோடியே அபராத கட்டனமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

இவற்றை விளக்கமாக‌ பார்ப்போம்.

விவசாயம் செய்யப்படும் நிலம் : கேட்கப்பட்டது (டிமான்டட்) 3300 ரூபாய் ஒரு ஏக்கருக்கு, வசூலிக்கப்பட்டது வெறும் 265 ரூபாய் ஒரு ஏக்கருக்கு (ஒரு வருடத்திற்கு)

நகரங்களில் வாடகை 2400 சதுரடி கொண்ட ஒரு மனைக்கு, கேட்கப்பட்ட தொகை 7000 ரூபாய், வசூலிக்கப்படுவது வெறும் 595 ரூபாய் (ஒரு வருடத்திற்கு). என்ன கொடுமை இது ?

இன்றைய சூழ்நிலையில் சந்தை நிலவரப்படி இந்த சொத்துகள் குறைந்தப்பட்சம் பத்தாயிரம் கோடி ரூபாய் வருமானம் தரக்கூடியது. அவைகளில் பாதி சொத்துக்களே, வாடகைக்கு கொடுக்கப்படுகிறது என்று எடுத்துக் கொண்டாலும் குறைந்தது 5000 கோடியாவது வருமானம் கிடைக்க வேண்டும். ஆனால் அரசாங்கத்தின் தவறான நிர்வாகத்தாலும், அக்கறையின்மையாலும், ஊழலினாலும் நம் கோவில்கள் பெரும் நஷ்டம் கொள்கின்றன. 1976 முதல் கோவில்களின் வருமானங்கள் தன்னிச்சையான தனிக்கை குழுவால் ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை. அறநிலயத் துறையின் தனிக்கை குழுவால் செய்யப்பட்ட தனிக்கைகளில் பரிந்துரைக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளே மேற்கொள்ளப்படவில்லை.

கோவில் நிலங்கள் கையூட்டுகளை பெற்றுக் கொண்டு குறைந்த விலைக்கு வாடகைக்கு விடப்படுவது மிக சாதாரணமாகி விட்டது. உயர்மட்டத்திலிருந்து, கீழ்மட்டம் வரை லஞ்சத்தில் ஊறிக்கிடக்கின்றன அறமில்லாத துறை. கோவில்களுக்கு சொந்தமான கடைகள் மிகக் குறைந்த வாடகையை தருகின்றன. வழிபறி கொள்ளைக்காரர்களாகவும் பல கடைகள் திகழ்ந்து வருமானத்தை பெருக்கிக் கொண்டு கொழிக்கின்றன.

தட்டி கேட்க ஆளில்லாமல் தாண்டவம் ஆடும், கரை வேட்டிகளில் கரை பிடிந்த கைகளில் இருந்து கோவில்களை மீட்பது நம் ஒவ்வொருவரின் கையில்தான் இருக்கிறது. நம்மால் என்ன செய்ய முடியும் என்று நாம் அமைதியாகவும் இருக்கலாம், நம்மால் முடிந்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தலாம்.

Thanks; Enlightened Master

Leave a Reply