புத்தகயை குண்டு வெடிப்பில் குஜராத் முதல்வர் நரேந்திரமோடிக்கு தொடர்புள்ளது என்ற திக்விஜய் சிங்கின் கருத்தை பாஜக வன்மையாக கண்டித்துள்ளது.

பிகார் முதல்வர் நிதீஷ்குமாருக்கு பா.ஜ.க., தொண்டர்கள் தகுந்தபாடம் கற்பிக்க வேண்டும் என்று மோடி பேசியிருந்தர் . இதற்கு அடுத்தநாளில் பிகாரின் புத்தகயையில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தது. இதற்கும் மோடிக்கும் சம்மந்தம் இருக்கலாம் என்று திக்விஜய் சிங் குற்றம்சாட்டியிருந்தார்

இந்நிலையில் தில்லியில் திங்கள் கிழமை செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மூத்த தலைவர் முரளிமனோகர் ஜோஷி கூறியதாவது : இல்லாத விஷயங்களை எல்லாம் கற்பனைசெய்து பேசுவது திக்விஜய்சிங்கின் வழக்கமாகிவிட்டது.

புத்தகயை தொடர் குண்டுவெடிப்பை முக்கியப் பிரச்னையாக கருத்தில்கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்தியாவின் கலாசாரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகவும், மதங்களிடையே இருக்கும் ஒற்றுமையை குலைக்கும் பயங்கரவாதிகளின் முயற்சியாகவும் இதனைக் கருதவேண்டும் என்றார் அவர்.

“திக்விஜய்சிங் கூறுவதையெல்லாம் கருத்தில்கொள்ள தேவையில்லை. அவர் தன்னிலையிழந்து இவ்வாறெல்லாம் கூறிவருகிறார்’ என பா.ஜ.க பொதுச்செயலாளர் அனந்தகுமார் கூறினார்

Leave a Reply