மத்திய அரசின்  பலவீனமே தீவிரவாத தாக்குதலுக்கு காரணம் மத்திய அரசு பலவீனமாக உள்ளதால் தான் பயங்கரவாத மற்றும் மாவோயிஸ்டு தாக்குதல்கள் அதிகரித்துவருகின்றன என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சுமத்தியுள்ளார்.

பீகார் மாநிலத்தில் உள்ள மகாபோதி கோவில்பகுதியில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டுதாக்குதல் சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் சமீபத்தில் நிகழ்த்தப்பட்ட மாவோயிஸ்டு தாக்குதல்சம்பவங்கள் அதிர்ச்சி தருவதாக உள்ளன. பயங்கரவாதிகள் திட்டமிட்டு தாக்குதல்நடத்துகின்றனர். இவற்றை தடுக்க மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்காததே இத்தகைய சம்பவங்கள் அதிகரித்துவருவதற்கு காரணம். இது மத்திய அரசின் பலவீனத்தை உணர்த்துவதாக உள்ளது என்றார்.

Leave a Reply