உலக ஊழல் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம் உலக ஊழல் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம் காங்கிரசின் அசைக்க முடியாத சாதனை

உலக அளவில் அனைத்து நாடுகளிலும் நடைபெறும் ஊழல்களை அடிப்படையாகவைத்து உருவாக்கப்பட்ட தர வரிசையில் இந்தியாவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

டிரான்ஸ்பரன்சி இன்டர் நேஷனல் அமைப்பு குளோபல்கரப்ஷன் பாரோ மீட்டர் 2013 என்ற தலைப்பில், உலகில் 107 நாடுகளில் நடத்தியஆய்வில், கடந்த இரண்டு வருடத்தில் இந்தியாவில் ஊழல் பன்மடங்கு பெருகிவிட்டதாக கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஊழலைதடுக்க அரசு எந்த ஒரு நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்றும், அங்குள்ள பல அரசியல்கட்சிகள் கறைபடிந்தவை என்று 86 சதவீதம் பேரும், நாடாளுமன்றம்கூட ஊழலால் பாதிக்கப்பட்டுள்ளது என 65 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.

ஊழலினால் இந்தியா மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என 45 சதவீத பேரும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply