எங்களது அடுத்த இலக்கு மும்பை; இந்தியன் முஜாகிதீன் பிகார் மாநிலம் புத்தகயாவில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்றுள்ள இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பு, தங்கள் அடுத்த இலக்கு மும்பை என மிரட்டல்விடுத்துள்ளது.

டிவிட்டரில் இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில்,புத்தகயாவில் 9 குண்டுகளையும் நாங்கள் தான் வெடிக்கச்செய்தோம். எங்களது அடுத்த இலக்கு மும்பைதான். முடிந்தால் தடுத்துப்பாருங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த டிவிட்டர் பதிவு கனடாவிலிருந்து பதிவாகியிருப்பதாகவும், இதனை பதிவுசெய்தவரை விரைவில் கண்டுபிடிப்போம் என்றும் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

Leave a Reply