ஜனாதிபதி ஆட்சியின் சாதனைகள்பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் ஜார்க்கண்ட்டில் பா.ஜ.க அரசுக்கு அளித்துவந்த ஆதரவை சிபுசோரனின் ஜார்க்கண்ட் முக்திமோர்ச்சா வாபஸ்பெற்றதை தொடர்ந்து அங்கு அரசு கவிழ்ந்து ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த பட்டுள்ளது.

6மாத ஜனாதிபதி ஆட்சிகாலம் வரும் 18–ம் தேதியுடன் முடிவடைய உள்ளநிலையில், அங்கு இதரகட்சிகள் ஆதரவுடன் ஜார்கண்ட் முக்திமோர்ச்சா ஆட்சியமைக்க உள்ளது.

இதனால் ஜனாதிபதி ஆட்சியை விலக்கிககொள்ள கவர்னர் பரிந்துரைசெய்துள்ளார். இந்நிலையில், கடந்த 6 மாதகாலமாக ஜார்க்கண்டில் நடைபெற்ற ஜனாதிபதி ஆட்சியின் செயல்பாடுகள்குறித்து கவர்னர் வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என பா.ஜனதா வலியுறுத்தியுள்ளது.

“கடந்த 6 மாதத்தில் மாநிலத்தில் வளர்ச்சிப்பணிகள் நின்றுவிட்டன. அதேசமயம் கொலை, கற்பழிப்பு, கொள்ளை, நக்சல் நடவடிக்கைகள் வழக்கமான நிகழ்வாகிவிட்டது . இந்த ஆறு மாதத்தில் அதிகாரிகள் மாற்றம், அதிகாரிகள் நியமனம் தான் அதிகமாக இருந்தது. எனவே, ஜனாதிபதி_ஆட்சியின் சாதனைகள்பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பாஜக கருத்து தெரிவித்துள்ளது.

Leave a Reply