நரேந்திர மோடி  பிரதமர் ஆவதை காண ஆவலாக உள்ளேன் பாஜக.,வில் மீண்டும் இணைவது குறித்து எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை, இருப்பினும் நரேந்திர மோடி பிரதமர் ஆவதை காண ஆவலாக உள்ளேன் என்று கர்நாடக ஜனதா கட்சியின் தலைவர் எதியூரப்பா கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது; பாஜக மூத்த தலைவர்களிடம் இருந்து கட்சியில் இணைய அழைப்புவந்தது. ஆனால் அதுகுறித்து நான் எந்த ஒருமுடிவும் எடுக்கவில்லை. இதுதொடர்பாக கட்சி நிர்வாகிகளிடம் கலந்துபேசி உரியநேரத்தில் உரிய முடிவெடுப்பேன். பாஜக.,வில் இணைவதால் மகிழ்ச்சியா என கேட்கிறீர்கள்… நான் அதுபற்றி எந்த ஒருமுடிவுமே எடுக்கவில்லை. நான்மட்டும் இல்லை, இந்த நாட்டின் 60% மக்கள் நரேந்திரமோடியின் தலைமையை பாராட்டுகின்றனர். அவர் பிரதமர் ஆவதை காண ஆவலாகஉள்ளேன் என்றார்.

Leave a Reply