காங்கிரஸ்சின் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதே நம்பிக்கை இழந்த காங்கிரஸ் கட்சி தலைவர் மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான பாஜக . அரசுக்கு எதிராக சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட இருந்தது. பேரவையில் தீர்மானத்தை தாக்கல்செய்து பேச காங்கிரசை சேர்ந்த எதிர்க் கட்சி தலைவர்

அஜய்சிங் எழுந்தார். அப்போது காங்கிரஸ் சட்டப் பேரவை கட்சி துணைத் தலைவர் ராகேஷ்சிங் சதுர்வேதி குறுக்கிட்டு தீர்மானத்தில் குறைபாடுகள் உள்ளதாக தெரிவித்தார். இதற்க்கு எதிர்ப்பும் தெரிவித்தார்.

அவரதுபேச்சால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது. காங்கிரசுக்கு எதிராக பா.ஜ.வினர் குரல்கொடுத்தனர். இதனால், கூச்சல்குழப்பம் ஏற்பட்டது. அப்போது, தொழில்துறை அமைச்சர் கைலாஷ் விஜய் வர்கியா எழுந்து, காங்கிரஸ் துணை தலைவருக்கே தீர்மானத்தின் மீது நம்பிக்கை இல்லாத நிலையில், தீர்மானம் விவாதத்துக்குவராது என்று தெரிவித்தார். தொடர்ந்து அமளி நிலவியதால் பேரவை கால வரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.

பின்னர், பேட்டியளித்த ராகேஷ்சிங் சதுர்வேதி, காங்கிரஸ்மீது நம்பிக்கை இழந்து விட்டதாகவும் பாஜக..வில் சேருவதாகவும் அறிவித்தார்.

Leave a Reply