போலீஸ்காவலில் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடமுடியாது கிரிமினல் வழக்குகளில் நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்படும் எம்பி., எம்எல்ஏ.க்களின் பதவியை உடனடியாக பறிக்கும்படி உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் அதிரடிதீர்ப்பை வழங்கியது. இந்த அதிர்ச்சியிலிருந்து கட்சிகளும், குற்றப்பின்னணி கொண்ட எம்பி., எம்எல்ஏக்களும் மீளும் முன்பாக,

உச்சநீதிமன்றம் ‘சிறையில் அல்லது போலீஸ் காவலில் உள்ளவர்கள், தேர்தல்களில் போட்டியிடமுடியாது’ என நேற்று மீண்டும் ஒரு அதிரடிதீர்ப்பை அளித்தது.

‘போலீஸ்காவலில் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடமுடியாது’ என்று பாட்னா உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, தலைமைதேர்தல் ஆணையர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுதாக்கல் செய்திருந்தார்.

நீதிபதிகள் ஏகே.பட்நாயக், முகோபாத்யா டிவிஷன்பெஞ்ச் இதை விசாரித்து நேற்று அளித்ததீர்ப்பில், ”வாக்களிக்கும் தகுதியுடைய வாக்காளர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிடமுடியும் என்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 4, 5ல் தெளிவாக வரையறுக்க பட்டுள்ளது. சிறையில் அல்லது போலீஸ்காவலில் உள்ளவர்கள், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 62(5)ன்படி வாக்களிக்க முடியாது. இதனால், தேர்தலில் போட்டியிடும் தகுதியை அவர்கள் இழக்கிறார்கள்” என்று உத்தரவிட்டனர்.

Leave a Reply