செப்டம்பர் மாதம் கோவையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நரேந்திரமோடி குஜராத் முதல்வர் நரேந்திரமோடி செப்டம்பர் மாதம் கோவையில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக பாஜக.,வின் மாநில பொருளாளர் எஸ்.ஆர் சேகர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது; கடந்த 4 ஆண்டுகளாக, சிறுபான்மையினரை போல ஏழை இந்துகளுக்கும் கல்வி உதவிதொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். ஆனால் மத்திய, மாநில அரசுகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்காக மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனுகொடுத்தோம். ஏழை இந்துகளுக்கு கல்வி உதவிதொகை வழங்ககும் நிகழ்ச்சி செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது . அதில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார் என்றார்.

Leave a Reply