மோடியின் நேர்மை, ஆட்சிமுறைகளை கண்டு மற்ற கட்சிகள் அஞ்சுகின்றன மோடி மிகதெளிவாக இருக்கிறார். அவரின் நேர்மை, ஆட்சிமுறை ஆகியவற்றை கண்டு காங்கிரஸ் மற்றும் இதரகட்சிகள் அஞ்சுகின்றன என்று பாஜக. வின் பாராளுமன்ற மாநிலங்களவை துணைத்தலைவர் ரவிசங்கர் பிரசாத் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்ததாவது மோடி மக்களிடம் பிரபலமாகி இருப்பது , குறை கூறமுடியாத அவரின் நேர்மை, ஆட்சிமுறை ஆகியவற்றை கண்டு காங்கிரஸ் மற்றும் இதரகட்சிகள் அஞ்சுகின்றன. அதனால், உண்மைகளை திரித்துக்கூறுவதை அவை வழக்கமாக கொண்டுள்ளன. ‘இந்தியாவில் அனைத்து உயிர்களும் வணங்க படுகின்றன, அவற்றுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அது வருத்தமளிக்கிறது’ என்றுதான் மோடி கூறினார்.

மோடி மிகதெளிவாக இருக்கிறார். அவர்கள் தெரிவித்துள்ளகருத்து மோடி மீதான வெறுப்பு என்று தான் என்னால் சொல்லமுடியும். இப்படி, எந்த அடிப்படையும் இல்லாமல் அவரைவெறுப்பது, நாட்டு மக்களிடம் அவரின் புகழை மேலும் அதிகரிக்கச்செய்யும் என்று அவர் கூறினார்.

Leave a Reply