நான் இளைஞர்களின் குரலையே பிரதி பலிக்கிறேன் நான் இளைஞர்களின் குரலையே பிரதி பலிக்கிறேன், இளைஞர்களின் கனவுகளையே நான் பேசுகிறேன். இளைஞர்களின் சக்தி மேம்படுத்தப்பட வேண்டும் , சீனாவை போன்று கல்வியில் புரட்சி உருவாக வேண்டும் என்று புனேயில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் பேசிய நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

புனே பெர்குஸ்சன் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு அவர் மேலும் பேசியதாவது:-

நான் நின்றுகொண்டு இருக்கும் இடம் நூறு ஆண்டுகள் பழமையானது. இங்கு மிகப் பெரிய தலைவர்கள் பலர் இளைஞர்களிடம் உரையாற்றியுள்ளனர். நான் இன்று சமூக வலை தளங்களில் தீவிரமாகசெயல்பட்டு வருபவர்களிடம் பேசுகிறேன். நான் இளைஞர்களாகிய உங்களுடன் தொடர்பிலிருக்க விரும்புகிறேன். அதனால்தான் வலைதளங்களில் இயங்கிவருகிறேன்.

நாட்டை கட்டமைப்பதில் இளைஞர்களுக்கு பெரும்பங்கு இருக்கிறது. அவர்கள் சரியான திசையில் செல்லவேண்டும். இந்தியா, மக்கள் தொகையில் 65 சதவீதம் இளைஞர்களை கொண்ட இளமையான நாடு. இளைஞர்களை அதிகம்கொண்டிருக்கும் அதிர்ஷ்டம் மிக்கநாடு இந்தியா.

இன்று கல்விவழங்குவது பணம்கொழிக்கும் வர்த்தகமாக மாறிவருகிறது. இதுவா நமது பாரம்பரியம்? இன்றை கல்விமுறையில் மாற்றம் வரவேண்டும். நாம் அதை நவீனப்படுத்த வேண்டும். மேற்கத்திய முறைக்கு மாற்றக்கூடாது.

எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வுண்டு. லட்சியத்தை அடைய நாம் உறுதியாக இருக்கவேண்டும். சுதந்திரத்துக்கு பின், உலக அளவில் நம்மை பெருமை படுத்தும் விதத்தில் ஒரு கல்வி நிறுவனம்கூட இல்லை.நாம் 21-ம் நூற்றாண்டை பற்றி பேசுகிறோம். ஆனால், இந்தியாவை 21ம் நூற்றாண்டு நாடாகமாற்ற நாம் முயற்சித்தோமா?

கொரியா போன்ற சிறுநாடுகள் கூட விளையாட்டில் சாதிக்கின்றன. அவர்கள் ஒலிம்பிக்போட்டிகளை நடத்தும் அளவுக்கு வளர்ந்துவிட்டனர். நாம் காமன்வெல்த் போட்டிகளை கூட சரியாக நடத்தவில்லை. சீனா ஒருநாட்டை எவ்வாறு மறுகட்டமைப்பு செய்யவேண்டும் என்று நமக்கு காட்டுகிறது. அவர்களுக்கு மொழிபிரச்சினை இருந்தபோதும் அவர்கள் தொடர்ந்து முன்னேறி வருகிறார்கள் .

அறிஞர்களையும், ஆராய்ச்சிகளையும் இந்தியா புறக்கணிக்கிறது. நாம் ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். நாட்டின் மொத்தஉள்நாட்டு உற்பத்தியில் 25 சதவீதத்தை கல்விக்காக நாம் செலவழிக்கவேண்டும். ஒரு நாட்டை முன்னேற்றுவதில் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது.

சிலர் அதிகாரத்தை கைபற்றுவதில்மட்டும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் முன்னேற்றமே நமக்கு முக்கியம். மனிதவள மேம்பாட்டுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும்.

உலகிலேயே முதல் முறையாக, குஜராத்தில் தடைய அறிவியல் பல்கலைக் கழகம் அமைக்கப்பட்டுள்ளது என்பதை கூறுவதில் நான் பெருமைப் படுகிறேன். இந்தியாவில் குறைந்த வேலையின்மை விகிதம்கொண்ட மாநிலம் குஜராத் என்பதை பெருமையுடன் கூறிக்கொள்கிறேன் என்றார்.

Leave a Reply