ஆர்எஸ்எஸ்., பஜ்ரங்தள் ஆகியவை தேசியவாத அமைப்புகள் உ.பி., மாநிலம் பகுஜன்சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, சாதிரீதியான கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்கு கோர்ட்டு தடைவிதிக்கும்போது, ஏன் ஆர்எஸ்எஸ்., விஸ்வ இந்துபரிஷத், பஜ்ரங்தள் உள்ளிட்ட அமைப்புகளுக்கு தடை விதிக்க கூடாது என கூறியிருந்தார்.

இதற்கு அம்மாநில மாநில பாஜக தலைவர் லஷ்மி காந்த் பாஜ்பாய் கண்டித்துள்ளார் , மேலும் பகுஜன்சமாஜ் கட்சி காங்கிரஸ்க்கு தந்துள்ள ஆதரவை திரும்ப பெற தைரியம் உண்டா என சவால் விடுத்துள்ளார்.

இதுகுறித்து லஷ்மிகாத் பாஜ் பாய் மேலும் கூறியதாவது: மாயாவதி ஆர்எஸ்எஸ்., விஸ்வ இந்துபரிஷத், பஜ்ரங்தள் உள்ளிட்ட அமைப்புகளை தடைசெய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். இந்த கருத்தை மத்திய அரசு ஏற்கதவறினால் மாயாவதி ஐ.மு., கூட்டணி அரசுக்கு தந்து வரும் ஆதரவை விலக்கிக்கொள்ள தயாரா என்று சவால் விடுத்துள்ளார்.

உ.பி.,யில் மாயாவதி, பாஜக.,வின் ஆதரவோடுதான் இரண்டு முறை முதல் அமைச்சர் ஆனார். ஆனால் இப்போது பயத்தின்காரணமாக இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். ஆர்எஸ்எஸ்., பஜ்ரங்தள் ஆகியவை தேசியவாத அமைப்புகள். அவை சாதி ரீதியாகவோ, மத ரீதியாகவோ வேறுபாடுபார்க்காமல் மக்களுக்கு சேவைசெய்து வருகின்றன என்றார்

Leave a Reply