போஃபர்ஸ் ஊழல்பணம் எங்கேசென்றது என்ற உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும்  இத்தாலிதொழிலதிபர் குவாத்ரோச்சியின் மரணம் போஃபர்ஸ் வழக்கை எந்த விதத்திலும் பாதித்து விடக்கூடாது என பாஜக வலியுறுத்தியுள்ளது.

போஃபர்ஸ் பீரங்கிபேர ஊழலில் தொடர்புடையவர் என்று குற்றம் சாட்டப்பட்ட குவாத்ரோச்சி வெள்ளிக்கிழமை காலமானார். இதனால் போஃபர்ஸ்வழக்கு பாதிக்கப்படலாம் என தெரியவருகிறது .

இந்நிலையில் பா.ஜ.க துணைத் தலைவர் முக்தர் அப்பாஸ்நக்வி கூறுகையில், இந்த ஊழல் மிகப் பெரியது. இந்தவழக்கின் அனைத்து அம்சங்களும் விசாரிக்கப்பட வேண்டும். ஊழல்பணம் எங்கேசென்றது உள்ளிட்ட அனைத்து உண்மைகளும் வெளியே கொண்டுவரப்பட வேண்டும். குவாத்ரோச்சியின் மரணத்தால், இந்தவழக்கின் விசாரணையை முடித்து விடக்கூடாது என்று வலியுறுத்தினார்.

ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அளித்த பேட்டியில், இந்தவழக்கு மீண்டும் விசாரிக்கப்பட வேண்டும். குவாத்ரோச்சி மரணம் ஒருபொருட்டே அல்ல. இந்தஊழலில் தொடர்புடைய மற்றவர்களை வெளியுலகுக்கு அம்பலப்படுத்தவேண்டும் என ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.

Leave a Reply