தமிழக பா.ஜ.க தலைவர் பொன்.ராதாகிருஷண்ன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது ; என்எல்சி. தொழிலாளர் போராட்டம் முடிவுக்குவந்திருப்பது சந்தோஷமான செய்தி . இனிமேலாவது பொதுத் துறை நிறுவனங்களின் விஷயத்தில் மத்திய அரசு எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும்.

காவிரியில் தற்போது திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீர் வழிந்து வருவது தான். இதை கணக்கில் எடுத்துக்கொள்ள கூடாது. தமிழகத்துக்கு உரியபங்கை பெற்றுதர பிரதமர் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இலங்கை அரசு தமிழர்களுக்கு உரிமைவழங்கும் 13வது சட்டதிருத்தத்தில் திருத்தம் கொண்டுவர முயற்சிக்கிறது. இதை மத்திய அரசு அனுமதிக்கக்கூடாது.

சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்குவது போன்று ஏழை இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்ககோரி இளைஞர் அணி சார்பில் தமிழ்நாடுமுழுவதும் 34இடங்களில் போராட்டம் நடைபெறுகிறது. சென்னையில் வருகிற 31–ந் தேதி நடைபெறும்.

கோவையில் செப்டம்பர்மாதம் பா.ஜ.க இளைஞர் அணிமாநாடு நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள நரேந்திரமோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.என்று அவர் கூறினார்.

 

Leave a Reply