நங்கள் தவறுசெய்து விட்டோம் நங்கள் தவறுசெய்து விட்டோம். இதன்காரணமாக மக்கள் விருப்பம் இல்லாமல் காங்கிரஸ்சை தேர்வு செய்திருக்கிறார்கள் என்று எடியூரப்பா பேசியுள்ளார்.

பட்ஜெட்மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் சபாநாயகர் கேஆர்.ரமேஷ் குமார், முந்தைய பா.ஜ.க அரசை கடுமையாக சாடினார். உட்கட்சிமோதல் மற்றும் ஊழல்களை குறிப்பிட்டுபேசிய அவர் பா.ஜ.க ஆட்சியில் இருந்தபோது செய்ததை மக்கள் எப்படிமறப்பார்கள்? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்குபதில் அளித்து எடியூரப்பா பேசும்போது, பா.ஜ.க.,வை விட்டுக் கொடுக்காமல் பேசினார். “நங்கள் தவறு செய்து விட்டோம். இதன் காரணமாக மக்கள் விருப்பமில்லாமல் காங்கிரஸ் அரசை தேர்வுசெய்திருக்கிறார்கள். இதிலிருந்த நாங்கள் பாடம் கற்றுக் கொண்டிருக்கிறோம். வரும் மக்களவை தேர்தலில் நாங்கள் உங்கள்பலத்தை 7-8 தொகுதிகளாக குறைப்போம்” என்று எடியூரப்பா சவால் விட்டார்.

Leave a Reply