ம.பி.,யில் பள்ளிப் பாடத்திட்டத்தில் பகவத்கீதை மத்திய பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க தலைமையிலான அரசு, பள்ளிப் பாடத்திட்டத்தில் பகவத்கீதை தொடர்பான சிலபாடங்களை கொண்டுவர முடிவுசெய்துள்ளது.

மாநில கல்வித் துறையுடன் நடத்தப்பட்ட பல கட்ட ஆலோசனைக்கு பின் , 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரையில் இந்தி சிறப்பு பாடப் புத்தகத்தில் பகவத்கீதை தொடர்பான சிலகதைகளை ஒரு பாடத்திட்டமாக சேர்க்க அரசு ஒப்புதல் தந்தது . இதைதொடர்ந்து சமீபத்தில் அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்டது.

ஆங்கில சிறப்பு பாடத் திட்டத்திலும் மேற்கண்ட பாடத்திட்டத்தை சேர்க்க அனுமதி வழங்க பட்டிருக்கிறது. 2013-14 கல்வியாண்டில் இருந்து இந்தி புதியபாடத்திட்டம் சேர்க்கப்படுகிறது.

குழந்தைகளுக்கு அறநெறிக்கல்வியை வழங்குவதற்காக பகவத் கீதையில் உள்ள சிலபகுதிகளை பாடத்திட்டத்தில் சேர்க்க கடந்த 3 வருடங்களாக அரசு முயற்சிசெய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply