உத்தரகண்டில்  ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் உத்தரகண்டில் வெள்ளநிவாரண பணிகள் முழுமையாக முடியும்வரை ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தவேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் முன்னாள் முதல்வர் ரமேஷ்நிஷாங்க் தலைமையில் மாநில பாஜவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உத்தரகண்ட் கனமழை காரணமாக பல நதிகளில் வெள்ளபெருக்கும், பலஇடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் கேதார்நாத், பத்ரிநாத் போன்ற புன்னியதலங்களுக்கு ஆன்மிகயாத்திரை வந்த லட்சக்கணக்கான வெளிமாநில மக்கள் சிக்கினர். 10 ஆயிரம் பேர்வரை உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

உத்தரகண்ட் மாநில அரசு கணக்குப்படி சுமார் 6 ஆயிரம்பேரை காணவில்லை. இவர்கள் அனைவரும் நேற்றுமுதல் உயிரிழந்தவர்களாக கருதப்படுவர் என அறிவிக்கப்பட்டது. இருப்பினும் கடைசிநேரத்தில் இதற்கான அறிவிப்பை மாநில அரசு கைவிட்டுள்ளது. காணாமல் போனவர்களை தேடும்பணி தொடரும் என மாநில முதல்வர் விஜய் பகுகுணா அறிவித்துள்ளார்.

இதற்கிடையில் நிவாரணபணிகளில் மாநில அரசு முழுமையாக செயல் இழந்து விட்டதாக பாஜக குற்றம் சுமத்தியுள்ளது. இதுதொடர்பாக பாஜக முன்னாள் முதல்வர் ரமேஷ்நிஷாங்க் தலைமையில் மாநில பாஜவினர் நேற்று பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து, நிவாரண பணிகள் முடியும்வரை மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும் என கோரிக்கைவைத்தனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரமேஷ்நிஷாங்க், உத்தரகண்ட் பேரழ¤வில் உயிரிழந்தவர்கள், காணாமல்போனவர்கள் எண்ணிக்கை குறித்து மாநில அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும். தேசியபேரழிவு மேலாண்மை அமைப்பை மாநிலத்தில் நிரந்தரமாக அமைக்கவேண்டும். இமாலயன் வளர்ச்சி ஆணையத்தை உருவாக்கவேண்டும். உத்தரகண்ட் பேரழிவை தேசியபேரழிவாக அறிவிக்க வேண்டும். வீடு இழந்தவர்களுக்கு அரசு செலவில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட வேண்டும். பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளை அரசு தத்தெடுக்கவேண்டும் என்றார்

Leave a Reply