பீகாரில் பல இடங்களில் வன்முறை  பேருந்துகள் தீவைப்பு  பீகார்மாநிலத்தில் அரசு பள்ளியில் மதிய உணவுசாப்பிட்ட மாணவர்களில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்ததை தொடர்ந்து இந்தசம்பவத்தை கண்டித்து பீகாரில் பலஇடங்களில் வன்முறை வெடித்துள்ளது. பேருந்துகள் தீவைத்து கொளுத்தப்பட்டன.

பாஜக மற்றும் ராஷ்டிரிய ஜனதாதள கட்சிகள் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன . மேலும் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இந்த சம்பவத்திற்கு பொறுப்பு ஏற்று பதவி விலகவேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

தொடர்வன்முறை சம்பவம்காரணமாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் குழந்தைகளில் பலரின்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பீகார்மாநிலம் முழுவதும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

Leave a Reply