நரேந்திரமோடியின் செல்வாக்கை காங்கிரசால் ஜீரணிக்க முடியவில்லை நரேந்திரமோடியின் செல்வாக்கு வளர்ந்துவருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தான் காங்கிரஸ்கட்சி குற்றச்சாட்டுகளை எழுப்பிவருகிறது என பாஜக. மூத்த தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு கருதத்து தெரிவித்துள்ளார்.

ஹைதராபாதில் செய்தியாளர்களிடம் மேலும் இது குறித்து அவர் தெரிவித்ததாவது . நரேந்திரமோடியின் பொதுக் கூட்டத்துக்கு வர விரும்புவோரிடம் ரூ.5 வசூலிக்கப்படுவது குறித்து மத்திய அமைச்சர் மணீஷ்திவாரி கருத்து குறித்து அவர் கூறியதாவது

நரேந்திரமோடியால் காங்கிரஸ் கட்சி நடுங்கிப்போயுள்ளது. அவர்களால் மோடியின் செல்வாக்கு வளர்ந்துவருவதை ஜீரணிக்க முடியவில்லை. அதனால் தான் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை அவர்கள் எழுப்புகிறார்கள். தரம்தாழ்ந்த வகையில் விமர்சிக்க அவர்கள் முயற்சிசெய்கிறார்கள் .

மோடியின் கூட்டத்துக்கு நிதி வசூலிக்க படுவதை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன் என புரியவில்லை. உத்தரகண்ட் நிவாரணத்துக்காக இந்த நிதிவசூல் நடைபெறுகிறது. இது தோல்வியடைந்த திரைப்படம்போன்றது என்று மணீஷ்திவாரி கூறுவாரானால், காங்கிரசும் தோல்வியடைந்த திரைப்படம் போன்றது தான். காங்கிரஸ் கட்சியானது கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து தோல்விப்படத்தையே ஓட்டிவருகிறது என்றார் வெங்கய்ய நாயுடு.

Leave a Reply