மும்பையை அலங்கரிக்கும் ஒரு இந்து தேசியவாதி போஸ்டர்கள்  தான் ஒரு இந்து தேசியவாதி என்று கருத்துகூறி பரபரப்பை ஏற்படுத்திய நரேந்திர மோடியின் கருத்து , தற்போது போஸ்டர் வடிவில் மும்பை முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளாது.

குஜராத் முதல்வரும், பாஜக-வின் பிரச்சாரக்குழு தலைவருமான நரெந்திர மோடி சமீபத்தில், கருத்து கூறுகையில், “நான் தேசியவாதி. நான் தேசபற்றுள்ளவன். அதில் எந்த தவறும் இல்லை. பிறப்பால் நான் இந்து. அதில் எந்த தவறும் இல்லை. அதனால் நான் ஒருஇந்து தேசியவாதி. நான் இந்து என்பதால் நீங்கள் என்னை இந்துதேசியவாதி என்று அழைக்கலாம்.” என்று கூறியிருந்தார்.

இதை மெய்ப்பிக்கும் விதமாக தற்போது மும்பைமுழுவதும், நரேந்திர மோடியின் கருத்தை தாங்கிய போஸ்டர்களை பாஜக..வினர் அச்சடித்து ஒட்டியிள்ளனர்

Leave a Reply