பிரபல கவிஞர் வாலி சென்னையில் உடல் நலக் குறைவால் காலமானார் பிரபலகவிஞர் வாலி சென்னையில் உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 82. நுரையீரல்தொற்று மற்றும் அதிகமான சளியின் காரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்டு சென்னை தேனாம் பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார். 35

நாட்களாக அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. கடந்த சில தினங்களுக்குமுன்பு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் 2 நாட்களாக செயற்கைசுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சிகிச்சைபலனின்றி நேற்று மாலை 5 மணிக்கு அவரது உயிர்பிரிந்தது. 1958-ம் ஆண்டு படங்களுக்கு பாடல்கள் எழுதத்துவங்கிய கவிஞர் வாலி இதுவரை ஆயிரம் படங்களுக்குமேல் பாடல்கள் எழுதியுள்ளார். பத்ம ஸ்ரீ மற்றும் தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார். தமிழில் எதுகைமோனையில் பாடல்கள் எழுதுவதில் இவரை விட சிறந்த கவிஞர் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply