கேரளா பாஜக இளைஞரணி தலைவவர்  படுகொலை வழக்கை மறு விசாரணை செய்யும் சிபிஐ கேரளாவில், பதிமூன்று வருடங்களுக்கு முன்பு பாஜக-வின் இளைஞரணி தலைவரும், ஆசிரியருமான கேடி. ஜெய கிருஷ்ணன், தனது வகுப்பறையில் மாணவர்கள் கண்ணெதிரிலேயே படுகொலைசெய்யப்பட்ட வழக்கை மறு விசாரணை செய்யுமாறு சிபிஐ அமைப்பை அம்மாநில அரசு கேட்டுக்

கொண்டுள்ளது. அரசியல் முக்கியத்துவம்வாய்ந்த இந்த வழக்கில், உண்மை குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பித்துள்ளதாக சமீபத்தில் எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து , இந்த வழக்கை மறு விசாரணை செய்வதற்கான கோரிக்கையை முதல்வர் உம்மன்சாண்டி சிபிஐ-யிடம் அதிகார பூர்வமாக அளித்துள்ளதாக அரசுவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 1999-ல் இந்தியகம்யூனிஸ்டு (மார்க்ஸிஸ்டு) தொண்டர்களால், கே.டி. ஜெய கிருஷ்ணன் படுகொலைசெய்யப்பட்ட வழக்கு, வேறு ஒருவழக்கில் சிக்கியதொண்டர் ஒருவர், உண்மை கொலையாளிகளை தங்கள்கட்சி சட்டத்தின் பார்வையிலிருந்து மறைத்து வைத்திருப்பதாக கூறியதால் பரபரப்பானதிருப்பத்தை சந்தித்தது. இந்த தகவலை அடிப்படையாக கொண்டு, கேரள காவல்துறையின் குற்றப்பிரிவிடம் இந்த வழக்கை ஒப்படைப்பது என்று அம்மாநில அரசு முதலில் முடிவுசெய்தது. ஆனால் அரசியல் ரீதியான சர்ச்சைகளைத் தவிர்ப்பதற்காக, தற்போது சிபிஐ-யை அரசு நாடியுள்ளது.

Leave a Reply