தமிழக பாஜக,.வின்  மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் வி.ரமேஷ் படுகொலை  தமிழக பாஜக,.வின் இளம் தளபதி மாநில பொதுச்செயலாளர் சேலம் ஆடிட்டர் வி.ரமேஷ் அவர்கள் கொலை வெறி கும்பலால் அவரது வீடு அருகே கொலை செய்யப்பட்டார்.

சென்ற 2012 ம் ஆண்டு அக்டோபர் மாதம் பாஜக மாநில மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் அரவிந்த் ரெட்டி படுகொலை செய்யப்பட்டார். சென்ற மாதம் தான் இந்து முன்னணி மாநில செயலாளர் வெள்ளையப்பன் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார் , இந்நிலையில் பாஜக மாநில பொதுச்செயலாளர் சேலம் ஆடிட்டர் வி.ரமேஷ் கொலை செய்யப்பட்டுள்ளார். ஒரு தேசிய கட்சியின் மாநில பொதுச் செயலாலருக்கே மாநிலத்தில் பாதுகாப்பு இல்லை.

Leave a Reply