நநேரந்திர மோடி, சுஷ்மா சுவராஜ் கடும் கண்டனம் தமிழகத்தில் பா.ஜ.க., பிரமுகர்கள் தொடர்ந்து கொலைசெய்யப்பட்டு வருவது பெரும் கவலையையும், அதிர்ச்சியையும் தருவதாக பா.ஜ.க, தேர்தல் பிரசாரகுழு தலைவர் நநேரந்திர மோடி, லோக்சபா எதிர்க் கட்சி தலைவர் சுஷ்மாசுவராஜ் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்தகொலை குறித்து குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியிருப்பதாவது: பா.ஜ.க., செயலர் ரமேஷ் ‌கொலைகுறித்து அதிர்ச்சி அடைந்தேன். இதுகுறித்து தமிழக தலைவரிடம் கேட்டறிந்தேன். அன்னாரது ஆத்மாசாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். குற்றவாளிகள் விரைவில் கைதுசெய்யப்பட்டு தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். என்று அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் நடந்துவரும் பா.ஜ.கே., பிரமுகர் கொலை, தம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக எதிர்க் கட்சி தலைவர் சுஷ்மாசுவராஜ் கூறியுள்ளார். சமீபத்தில் நடந்த கொலைகள் தொடர்பாக முழுஅளவில் விசாரிக்கவேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply