புலானய்வு துறையின் செயலிழந்த தன்மை கவலை தருகிறது இந்துமுன்னணி நிறுவன அமைப்பாளர் ராம கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– பாஜக மாநில பொதுச்செயலாளர் சேலம் ஆடிட்டர் ரமேஷ் பயங்கரவாதிகளினால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 1–ம் தேதி வேலூரில் இந்துமுன்னணி மாநிலச்செயலாளர் வெள்ளையப்பனை பயங்கரவாதிகள் கொலைசெய்தனர்.

முன்னாள் பாரதத் துணைப்பிரதமர் அத்வானி ரதயாத்திரையில் குண்டுவைத்த முக்கிய குற்றவாளியை கைதுசெய்த போலீஸ் அவரது டைரியில் இந்து முன்னணியன் நான்கு முக்கியநபர்களை கொலை செய்வதற்கான குறிப்புகள் இருந்ததை கண்டுபிடித்தனர்.

ஆனால் அதன் பிறகும் காவல்துறை விழித்து கொள்ளவில்லை. புலானய்வு துறையின் செயலிழந்தத் தன்மையை கண்டு தமிழகம் கவலைகொண்டுள்ளது. காவல் துறை மீதும், நீதிமன்றத்தின் மீதும் மக்கள் நம்பிக்கையிழப்பது என்பது நாட்டிற்கு நல்லதல்ல!

ஒருநெருக்கடியான காலகட்டத்தை தற்போது தமிழகம் சந்தித்துவருகிறது! இதனை வளரவிட்டு பின்னர் வருத்தப்படுவதால் எந்தப்பயனும் இல்லை.

வேலூரில் டாக்டர் அரவிந்தரெட்டியை கொலைசெய்த பயங்கரவாதிகளில் யாரையும் காவல்துறை கைதுசெய்யவில்லை. இப்படி செயலிழந்த தன்மையால் பயங்கரவாதிகளுக்கு தைரியம் கூடியிருக்கிறது. தொடர்கொலைகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனை இரும்புக்கரம்கொண்டு அடக்கத் தவறுவது தேசிய அளவில் தமிழகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக முதல்வர் தனிக்கவனம் செலுத்தி காவல்துறையை முடுக்கிவிட்டு பயங்கரவாதிகளை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இந்தத் துயரமானநேரத்தில் ஆடிட்டர் ரமேஷ் மறைவிற்கு இந்துமுன்னணி ஆழ்ந்த இரங்கலையும், அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.என்று அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply