ஆடிட்டர் ரமேஷ் கொலைகுறித்து சிறப்பு புலனாய்வுக் குழு பாஜக., மாநில பொதுச் செயலர் ஆடிட்டர் ரமேஷ் கொலைகுறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைநடத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

சேலம் மரவனேரியைச் சேர்ந்த பாஜக., மாநில பொதுச்செயலர் ஆடிட்டர் ரமேஷ் நேற்று முன்தினம் மர்மநபர்களால் வெட்டிக்‌கொல்லப்பட்டார். இந்நிலையில் இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலைகுறித்து விரைவான விசாரணை நடை பெறும் வகையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இக்குழு வேலூரில்கொல்லப்பட்ட இந்து முன்னணி மாநிலச்செயலாளர் வெள்ளையப்பன் படுகொலை குறித்தும் விசாரணை நடத்தும் என்றும் டிஜிபி. மேற்பார்வையில் இந்தக்குழு செயல்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அதில் தெரிவித்துள்ளார் .

Leave a Reply