சென்னையில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ்பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சேலத்தில் பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் ஆடிட்ட ரமேஷ் கொலைசெய்யப்பட்டதை தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது .

அடுத்தடுத்து இந்து முன்னணி, பா.ஜ.க தலைவர்கள் கொலைசெய்ய்பட்டுள்ளதால் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. ரமேஷ் கொலையைத்தொடர்ந்து சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு பாதுகாப்பு அளிக்கப்படவேண்டும் என தமிழக பாஜக.,வின் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தமிழக அரசுக்கு கோரிக்கைவிடுத்திருந்தார்.

இதனை தொடர்ந்து தமிழ்நாடு கட்சி தலைமையகத்தில் ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பிற்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.

Leave a Reply