சேலம்  மகளிர் அணி நிர்வாகி உயிரிழந்தார் சேலம் சின்னதிருப்பதி பாரதிநகரைச் சேர்ந்தவர் ராஜ ராஜேசுவரி (வயது 45). இவர் பாஜக.,வின் மாநிலமகளிர் அணி செயற்குழு உறுப்பினராகவும், மண்டல மகளிர் அணி தலைவியாகவும் இருந்து வருகிறார் . இவரதுகணவர் பாபு கும்பகோணத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டராக உள்ளார்.

ஆடிட்டர் ரமேஷ் கொலைசெய்யப்பட்ட தகவல் அறிந்த ராஜராஜேசுவரி சோகமாக இருந்தார். நேற்று ஆடிட்டர் ரமேஷ்வீட்டில் அழுதுகொண்டே இருந்தார்.

நேற்று இரவு வீட்டுக்குசென்ற இவர் எதுவும் சாப்பிடவில்லை. இந்நிலையில் காலை 11.30 மணிக்கு வீட்டிலிருந்த இவர் திடீரென்று மண்எண்ணை எடுத்து உடலில் ஊற்றி தீவைத்துக்கொண்டார். அக்கம்பக்கம் இருந்தவர்கள் இவரை மீட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். . அங்கு சிகிச்சை பலனின்றி சேலம் மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார்.

Tags:

Leave a Reply