சேலம்வந்து படுகொலை செய்யப்பட்ட பாஜக ஆடிட்டர் ரமேஷ் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் பா.ஜ.க தேசிய பொதுசெயலாளர் முரளிதரன்ராவ் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது.

“ஆடிட்டர் ரமேஷ் மிகமிக அமைதியானவர்.நல்லமனம் படைத்தவர்.அவரின் படுகொலை அதிர்ச்சிதருகிறது .இதில் காவல் துறை மெத்தனமாக நடந்து கொள்கிறது. நான் இங்கு வரும் போது சுஷ்மாசுவராஜ் என்னிடம் தனிப்பட்டமுறையில் ‘பர்சனலா எனக்கு ஆடிட்டர் ரமேஷ் ஜியை எனக்குதெரியும். தேர்தல்சமயத்தில் அறிமுகம் மிகநல்ல மனிதர் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை குடும்பத்திற்குசொல்லுங்கள்’ என்றார். நரேந்திரமோடி அவர்கள் என்னை தொடர்பு கொண்டு தமிழக அரசு இந்த விசயத்தில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது’ என்று கேட்டார்.ஆக தேசிய தலைவர்களிடம் நல்ல மதிப்பை பெற்றவர் ரமேஷ்ஜி.

இந்தபடுகொலையை தேசிய தலைவர்கள் தீவிரமா பாக்குறாங்க.திட்டமிடல் இல்லாமல் இந்தபடுகொலை இல்லை.நல்லா ப்ளேன்செய்து நடந்துள்ளது.பலநாள்,வருஷம் என பாலோசெய்தும்,கண்காணித்தும் படுகொலை செய்துள்ளனர்.கொடூரமரணம் இது. வேலூர்ரெட்டி,வெள்ளையப்பன் என தொடர்கொலைகள் நடந்துவருகிறது.தொடர் தேசவிரோத ஜிகாதி செயல்களை கண்டிக்கிறோம்.அரசுவிருபத்தொடு தீவிர புலனாய்வுசெய்யனும்.

இல்லையென்றால் தமிழகமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஆகிவிடும்.மேலும் தீக்குளிப்பு போன்ற செயல்களை தவிருங்கள்.இன்று ராஜராஜேஸ்வரி தீக்குளித்து சிகிச்சை பெற்றுவருவதாக அறிகிறேன். உணர்சிகளை கட்டுபடுத்தி கொள்ளுங்கள். தமிழக அரசு மக்களுக்கு உறுதிதரனும்.விரைவில் குற்றவாளிகள் தண்டிக்கப்படனும்.’என்றார்..

Leave a Reply