ஆடிட்டர் ரமேஷ்சின் நண்பர் அதிர்ச்சியில் மரணம்  சேலத்தில் பாஜக மாநில பொதுசெயலாளர் ஆடிட்டர் ரமேஷ் மர்மகும்பலால் கொலை செய்யப்பட்டார். இதை அறிந்த அவரது நண்பர் முருக மணி (வயது 52) நேற்று சேலம்வந்தார். இவர் சேலம் மாவட்ட பாஜக.,வில் மாவட்ட செயற்குழு உறுப்பினராக இருந்துவருகிறார்.

சேலம் வந்த இவர் ஆடிட்டர் ரமேசின் உடலைபார்த்து கதறி அழுதார். பிறகு அவர் ரமேசின் இறுதி ஊர்வலத்திலும் கலந்துகொண்டார். அப்போது அவர் அழுதபடியே இருந்துள்ளார் . இதை அறிந்த மற்றநிர்வாகிகள் முருகமணியை சமாதானம்செய்து அவரை வீட்டிற்கு அனுப்பிவைத்தனர். வீடுசென்ற முருகமணி சோர்ந்து இருந்தார்.

இந்நிலையில் இரவு 9 மணி அளவில் அவருக்கு திடீரெ மாரடைப்பு ஏற்பட்டது. பின்னர் சிறிதுநேரத்தில் இறந்து விட்டார்.

இது குறித்து சேலத்தை சேர்ந்தவரும், சேல மாவட்ட பாஜக மாவட்ட பொதுசெயலாள ருமான அயோத்தி ராமச்சந்திரன், ”முருகமணி ஆடிட்டர் ரமேசின் நெருங்கியநண்பர். பலவருடமாக ஆன்மீக பணியில் ரமேசுடன் இணைந்து செய்துவந்தார்.

நேற்று சேலம்வந்த அவர் தொடர்ந்து அழுதபடி இருந்தார். அவருக்கு பலரும் ஆறுதல்கூறினர். ஆனால் அவர் சமாதானம் அடைய வில்லை. இறுதி ஊர்வலத்திலும் அவர் கலந்துகொண்டார். பின்னர் வீட்டிற்கு அனுப்பிவைத்தோம். அங்கு சென்றபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார்”என்று கூறினார்.

Leave a Reply