தமிழகத்தில்  சட்டம்ஒழுங்கு தொடர்ந்து சரிந்து வருகிறது சேலத்தில், தமிழக பா.ஜ.க, பொதுச் செயலர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த படுகொலையை, திமுக., சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். மறைந்த ரமேஷ் குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும், எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

அரசியல் கொலைகள் தொடர்ந்துகொண்டே போகின்றன. கடந்த ஓராண்டில்மட்டும், தமிழகத்தில் பா.ஜ.க , ஆதரவாளர்கள் ஆறுபேர், கொடூரமாகவெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். திருச்சியில் ராம ஜெயம் படுகொலை செய்யப்பட்டு, எத்தனையோ மாதங்களாகிவிட்டன. தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் கொலை செய்ய படுகின்றனர்.நாள் தோறும் நடைபெறும் கொலைகளும், கொள்ளைகளும் சட்டம்ஒழுங்கு தொடர்ந்து சரிந்து, சாய்ந்து கொண்டிருப்பதையே காட்டுகின்றன என்றார்.

Leave a Reply