சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலைசெய்யப்பட்டது சம்பந்தமாக மதுரை ஆதீனம் கடும்கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆதீனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, அண்மைக்காலமாக இந்துசமய அமைப்புகளின் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கொலை வெறித்

தாக்குதலுக்கு உள்ளாகி மரணம்அடைவது மிகவும் கவலைக்குரிய, வேதனைக்குரிய, கண்டனத்துக் குரிய செயலாக அமைந்துள்ளது.

இப்படிப்பட்ட வன்முறைச்சம்பவங்கள் நிகழ்வதற்கு உரியகாரணங்களைக் கண்டுபிடித்து, அவற்றைத் தடுக்கவேண்டிய பொறுப்பை, காவல் துறைக்கு வழங்கிடவேண்டும். சைவ, வைணவ சமயங்களின் அடித்தள ஞானபூமி தமிழ்நாடு. உலகத்திற்கே வழிகாட்டியாக எல்லா வகைகளிலும் சிறந்துவிளங்கி வருவது தமிழ்நாடு. இப்படிப்பட்ட புனிதமான, உயர்ந்த நமது தமிழகத்தில் இத்தகுசம்பவங்கள் முற்றிலும் தடுக்கப்பெறவேண்டும்.

ரமேஷ் கொலைச்சம்பவத்தை ஆராய்ந்து, தக்கநடவடிக்கை எடுத்திட உத்தரவிட வேண்டும். என்று மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply