ஆடிட்டர் ரமேஷ் படுகொலை தமிழக அரசுக்கு விடப்பட்ட சவால் சேலத்தில் பாஜக பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை தமிழக அரசுக்கு விடப்பட்ட சவால் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் தனது பத்திரிக்கை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ; இந்த கொலை எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது. கட்டப்பஞ்சாயத்து , வன்முறை என்று எதுவும் இல்லாமல் அமைதி வழியில் அரசியல் நடத்திய அகிம்சைவாதிக்கு இது தான் தண்டனையா. ஒரு நல்ல அரசியல் வாதிக்கு நடந்திருக்கும் இந்த நிகழ்வை தமிழக மக்கள் மட்டும் அல்லாமல் இந்திய மக்களும் மன்னிக்க மாட்டார்கள் . எந்த காரணத்திற்காக இந்த குற்றம் நடந்திருந்தாலும் அதை செய்தவர்களையும் செய்ய தூண்டியவர்களையும் பிடித்து தமிழக அரசு தண்டிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்

Leave a Reply