கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த பா.ஜ.க மாநில நிர்வாகிக்கு கொலைமிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து , துப்பாக்கி ஏந்திய போலீஸ்பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

பாஜக மாநில துணைத் தலைவர் முனவரிபேகம். இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் பாஞ்சாலியூரில் குடியிருந்துவருகிறார். இவருக்கு செவ்வாய்க் கிழமை இரவு தொலைபேசி மூலம் கொலைமிரட்டல் வந்துள்ளது.

இதுகுறித்து முனவரி பேகம், கிருஷ்ணகிரி காவல் கண்காணிப்பாளர் எஸ்ஆர். செந்தில் குமாரிடம் புகார் அளித்தார். இதைதொடர்ந்து , துப்பாக்கி ஏந்திய இரண்டு காவல் துறையினர், முனவரிபேகத்தின் வீட்டில் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply