தலிபான்களுடன் அமெரிக்கா மேற்கொள்ளும் பேச்சுவார்த்தை வீணானது தலிபான்கள் இன்னும் தங்கள்பயங்கரவாத நடவடிக்கையை மாற்றிகொள்ளாததால் , தலிபான்களுடன் அமெரிக்கா மேற்கொள்ளும் பேச்சுவார்த்தை வீணானது,” என்று பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத்சிங், ஐந்துநாள் பயணமாக, அமெரிக்கா சென்றுள்ளார். கேப்பிடல் ஹில் அமெரிக்கவாழ் இந்தியர்கள், கேப்பிடல் ஹில் பகுதியில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், ராஜ்நாத்சிங் பேசியதாவது: பயங்கரவாதிகளின் சொர்க்க பூமியாக ஆப்கானிஸ்தான் இருந்ததால்தான், அந்நாட்டின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி, தலிபான் ஆட்சியை அகற்றியது. தலிபான்கள் இன்னும் தங்கள்பயங்கரவாத நடவடிக்கையை மாற்றிகொள்ளாததால், அவர்களுடன் அமெரிக்கா நடத்தும் பேச்சுவார்த்தை பயனற்றதாகும். உலகின் மிகப் பெரிய, பாமியான் புத்தர்சிலையை, தலிபான்கள், பீரங்கியால் சுட்டு அழித்தனர். இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள குஷிநகரில், பாமியான் புத்தர்சிலையை போன்ற மாடலில் வேறொரு சிலை அமைக்கப்படும்.

ஆப்கானிஸ்தான் விஷயத்தில், எந்த ஒருமுடிவு எடுத்தாலும், அதை இந்தியாவுக்கு, அமெரிக்கா தெரிவிக்கவேண்டும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்புகாஷ்மீரில் உள்ள, ஜில் ஜிட் பால்டிஸ்தான் பகுதி, இந்தியாவுடன் இருந்தகாலத்தில், சர்வதேச பட்டுசாலையாக இருந்தது. 106 கி.மீ., எல்லையுடைய இந்தபகுதி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ளதால், ஆப்கானிஸ்தானுடனான நேரடி வழி துண்டிக்கப்பட்டுவிட்டது. பால்டிஸ்தான் பகுதியில் உள்ள மக்கள் பல்வேறு அடக்கு முறைகளுக்கு ஆளாகியுள்ளனர். அங்கு மனித உரிமை மீறல்கள் நடக்கின்றன. இவ்வாறு, ராஜ்நாத்சிங் பேசினார்.

Leave a Reply