கட்சியினருக்கு இருக்கும்  அச்சுறுத்தல்கள் குறித்து திங்கள்கிழமை முழு அறிக்கை  சமர்ப்பிக்கப்படும் தமிழகத்தில் சமீபகாலமாக இந்து அமைப்புகளின் பிரமுகர்கள் தாக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. என்று பாஜக. செய்தித்தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கருத்து தெரிவித்துள்ளார்.

சேலத்தில் பாஜக மாநில பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, தமிழகத்தில் நிலவும் சூழல்குறித்த உண்மை நிலையை கண்டறிய, அக்கட்சியின் அகில இந்திய செய்தித்தொடர்பாளர்கள் பிரகாஷ் ஜவடேகர், நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற உறுப்பினர் அனந்த குமார் ஹெக்டே அடங்கிய மத்திய மூவர்குழு அமைக்கப்பட்டது.

அந்த குழுவினர் புதன்கிழமை கோவைவந்தனர். தங்கள் வருகை குறித்து பாஜக. செய்தித்தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கூறியது:

÷தமிழகத்தில் சமீபகாலமாக இந்து அமைப்புகளின் பிரமுகர்கள் தாக்கப் படுவதும், கொலை செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. பாஜக. மாநில பொதுச்செயலாளர் ரமேஷ் கடந்தவாரம் கொலை செய்யப்பட்டுள்ளார்.

÷இச்சம்பவம் குறித்தும், கடந்த சிலமாதங்களில் இங்குள்ள பாஜக. மற்றும் சங்கபரிவார் அமைப்புகளின் இந்து இயக்க தலைவர்கள், நிர்வாகிகள் மீதான தாக்குதல், கொலைச்சம்பவங்கள், வழக்குகள் குறித்தும் விசாரித்து அறிக்கை அளிக்க, பாஜக.வின் தேசியத் தலைவர் ராஜ்நாத்சிங் இக்குழுவை அமைத்துள்ளார்.

÷சென்னை, சேலம், கோவை, வேலூர் ஆகிய இடங்களில் ஏற்பாடுசெய்யப் பட்டுள்ள மையங்களில், கட்சியினருக்கு இருக்கும் பாதிப்புகள், அச்சுறுத்தல்கள், பிரச்னைகள்குறித்து விசாரித்து, அவற்றை இங்குள்ள தலைவர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, திங்கள்கிழமை முழுஅறிக்கை கட்சித் தலைமையிடம் சமர்ப்பிக்கப்படும். பிறகு அவை அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்படும் என்றார்.

Leave a Reply