தி.மு.க எம்.பி.க்கள் கையெழுத்திட்டிருந்தால் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் குஜராத் முதல்வர் நரேந்திரமோடிக்கு விசா வழங்கக்கூடாது என அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு எழுதப்பட்ட கடிதத்தில் தி.மு.க எம்.பி.க்கள் கையெழுத்திட்டிருந்தால் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கருணாநிதி எச்சரித்துள்ளார்.

இது குறித்து வியாழக்கிழமை அவர்வெளியிட்ட அறிக்கை:

அமெரிக்காசெல்ல நரேந்திரமோடிக்கு விசா அளிக்கக்கூடாது என்று இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கையெழுத்திட்டு ஒபாமாவுக்கு கடிதம் எழுதியதாக செய்திகள்வந்துள்ளன.

ஆனால் அந்த கையெழுத்தினை தாங்கள்போடவில்லை என்றும், இந்தப்பிரச்னையை குறிப்பிட்டு தங்களிடம் யாரும் கையெழுத்து பெறவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். தி.மு.க.,வின் நாடாளுமன்ற உறுப்பினர்களை நான் (கருணாநிதி) தொடர்பு கொண்டு கேட்டபோது, தாங்கள் அவ்வாறு கையெழுத்திடவில்லை என மறுத்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரியும், எந்தவொரு கடிதத்திலும் தான் அவ்வாறு கையெழுத்திடவில்லை என்று மறுத்துள்ளார். தி.மு.க.,வைப் பொருத்தவரை மத்திய அரசின் எந்தவொரு வெளிநாட்டு கொள்கையிலும் அதன் உள்விவகாரங்களிலும் குறுக்கிடுவதில்லை.

ஒபாமாவுக்கு எழுதிய கடிதத்தில் தி.மு.க.,வினர் யாரும் கையெழுத்திட வில்லை என்று கூறிய போதிலும், அவ்வாறு கையெழுத்திடுவதை தி.மு.க தலைமை ஏற்கவில்லை. தலைமையைக் கலந்துபேசாமல் எவறேனும் அவ்வாறு கையெழுத்திட்டிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கருணாநிதி கூறியுள்ளார்.

Leave a Reply