அமர்த்யாசென் ஒரு இந்தியரே அல்ல நாட்டின் பிரதமராக குஜராத்முதல்வர் நரேந்திரமோடி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த நோபல்பரிசு பெற்ற பொருளாதார வல்லுநர் அமர்த்யாசென் ஒரு இந்தியரே அல்ல என்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து சுப்பிரமணியன் சுவாமி மேலும் கூறியதாவது; அமர்த்யாசென் ஒரு இந்தியரே அல்ல. அவர் பெங்காலி மனைவியை கைவிட்டுவிட்டு 2 வெளிநாட்டு பெண்களை திருமணம்செய்து கொண்டவர். அமர்த்யாசென் வெளிநாட்டில் வசிப்பவர். அவ்வப்போது இந்தியாவருவார். அதனாலேயே அவர் இந்தியராகி விட முடியாது. ஒருவல்லுநர் என்பவர் இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை தொடர்ந்து எழுதும் போது அதற்கான எதிர் வினையை எதிர்கொண்டாக வேண்டும் என்றார்.

Leave a Reply