அரவிந்த்ரெட்டி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல வேலூரில் அரவிந்த்ரெட்டி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என பாஜக. மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார் .

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ; இதில் தீவிர புலனாய்வு செய்து உண்மையான குற்றவாளிகளை கண்டு பிடித்து தண்டிக்கப்படவேண்டும். வெள்ளையப்பன், ஆடிட்டர் ரமேஷ் கொலையை விசாரிக்கநியமிக்கப்பட்ட சிபிசிஐடி. போலீசார் அரவிந்த்ரெட்டி கொலையையும் சேர்த்து விசாரிக்க தமிழக அரசு உத்தரவிடவேண்டும்.

வெள்ளையப்பன், ரமேஷ் ஆகியோரை 3 பேர்கொண்ட கும்பல் கொலைசெய்துள்ளனர். குற்றவாளிகள் நிதானமாக, பதற்ற மில்லாமல் கொலைசெய்து உள்ளனர். மேலும் வெடிகுண்டுகள்வைத்து இருந்துள்ளனர். இரண்டு கொலைகளும் ஒரேமாதிரி செய்யப்பட்டுள்ளன. தனி நபருக்காக கொலை செய்யப்பட வில்லை அச்சுறுத்தல் இருக்கவேண்டும் என்று கொலை செய்யப்பட்டுள்ளது. எனவே, உண்மையான குற்றவாளிகளை தண்டிக்கவேண்டும் என்று அவர் கூறினார்.

Leave a Reply