டி.ஜி.பி.க்கு ஒரு சாமானியனின் பதில் அறிக்கை தமிழக காவல்துறை தலைவர் டி.ஜி.பி. திரு கே.ராமானுஜம் ஒரு அற்புதமான ஆபீஸர். நேர்மையாளர். நல்லவர். திறமைசாலி. கரைபடாதவர்…

இந்த பட்டங்களுக்கும், அவருடைய இன்றைய அறிக்கைக்கும் நிச்சயமாக எந்த சம்பந்தமும் இல்லை.

ஆகஸ்ட் 1 ஆம் தேதி சேலம் வருகை தரும் அத்வானியின் வருகைக்குள்—- ஒருவேளை கொலைகாரர்களை கைது செய்ய முடியாமல் போய்விட்டால்…….எதற்கும் இருக்கட்டுமே என்ற முன்னெச்சரிக்கையில் "அம்மாவை காப்பாற்ற" இப்படி ஒரு அறிக்கை..இன்று விட்டு இருக்கிறார்.

இந்துஇயக்க தலைவர்கள் மீது நடத்தப்பட்ட எல்லா தாக்குதல்களும், மதவாத தாக்குதல் அல்லவாம்..அப்பிடின்னா..என்னங்க டி.ஜி.பி.சார்..?

டி.ஜி.பி.சார் கணக்குப்படி மதவாத தாக்குதல் என்றால், "அவர்கள்"—தாடி வச்சு, குல்லா அணிந்து, பாத்தியா ஓதி, பச்சபொடி,பச்சகொடியோட, "அல்லாஹூ அக்பர்ன்னு" கத்திக்கிட்டே வந்து, குத்தினாதான், அதுமதவாத தாக்குதலா..டி.ஜி.பி.சார்..

என்ன கொடுமை சார் உங்கள் விளக்கம்…

உங்களுடைய அறிக்கை படியே பார்ப்போம்..

1.புகழேந்தி ரௌடி என்கிறிர்கள்..ரௌடிய யார் வேண்டுமானலும், கொல்லலாமா?

இஷ்ரத் ஜஹான் போன்ற எத்தனையோ..தேசவிரோதிகள், ரௌவுடிகளை போலிஸ் போட்டுத்தள்ளியபோது, கூச்சலிட்ட மனித உரிமையாளர்கள், காங்கிரஸ்காரகள், இவர் ரௌடி என்றால் கூச்சல் போட்டிருப்பார்களே..போடவில்லையே—யாரும் வரவில்லையே..இதுவே போதுமல்லவா இது மதவாத கொலை என்பதற்கு..

சரி உங்கள் வாதப்படியே புகழேந்தி ரௌடி என்று வைத்துக்கொள்வோம்..ரௌடியை கொலை செய்வது உங்கள் ஆட்சியில் சட்டவிரோதம் இல்லையா?—இது சட்டம் ஒழுங்கு சீர்குலைவு இல்லையா?—ரௌடியை கொலை செய்வது குற்றம் இல்லை என்று "அனவுன்ஸ்" பண்ணுங்க  டி.ஜி.பி.க்கு ஒரு சாமானியனின் பதில் அறிக்கை பார்ப்போம்..உங்கள் அம்மா கட்சி எம்.எல்.ஏ, மந்திரிகள் உட்பட எத்தனை ரௌடிகளை பொதுமக்களால் பரலோகம் போகிறார்கள் என்பதை நாம் பார்க்கலாம்.

2.அரவிந்த் ரெட்டி கொலை கொடுக்கல் வாங்கலில் கொலையாம்..ஆம் அவர் டாக்டர்…மருந்து கொடுத்து, ஊசி போட்டு காசு வாங்கியிருப்பார்..

கொடுக்கல் வாங்கல் தகராரில் கொலை செய்தால் அது சட்டவிரோதம் இல்லையா? உங்கள் அரசில் இதை எப்போது சட்டமாக்கினீர்கள் டி ஜி பி சார்…பொதுமக்கள் பார்வையில், நட்டநடு ரோட்டில், ஓடஓட விரட்டி கொலைசெய்யும் அளவு உங்கள் ஆட்சியில், சட்டம் ஒழுங்கு சுறுசுறுப்பாக இருக்கிறது…டி ஜி பி சார்..?

3.மேட்டுப்பாளையம் ஆர்.எஸ்.எஸ். செயலர் ஆனந்த் தாக்குதல் பழிதீர்க்க நடத்தப்பட்டதாம்..கைது செய்யப்பட்ட அபுதாகீருக்கும் இவருக்கும் என்ன பகை.?…பழிதீர்த்தது எதனால்.? .டி.ஜி.பி.விளக்குவாரா?—விளக்கினால்..வியட்னாம் வீடு சுந்தரம் போல புதிய கதை எழுதினால் மட்டுமே முடியும்..

4.ஊட்டி மஞ்சுநாத், இ.ம.க. அர்ஜுன்ச்ம்பத், குன்னூர் ஹரிஹரன், குமரி எம்.ஆர்.காந்தி, இவர்களை தாக்கியதாக கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் இஸ்லாமியர்கள்..இது மத மோதல் இல்லாமல் வேறு என்னவாம்?—நண்பர்களுக்குள் தகறாரா?—இல்லை சம்பந்தி சண்டையா?—

டி.ஜி.பி.க்கு ஒரு கேள்வி..

கைது செய்யப்பட்டவர்களில் சிலரை நீங்கள் குண்டாஸ் மற்றும் என்.எஸ்.ஏ. யில் போட்டிருப்பதற்கு பாராட்டுக்கள்..

உங்களுடைய..கைதுகள்" கணக்குக்காட்ட மட்டுமே "-இருக்கிரது..இதை உறுதி செய்கிரது இன்றைய நிகழ்வுகள்.. உங்கள் ஆட்சியில் குற்றவாளிகள் பயந்ததாகவோ, குற்றங்கள் குரைந்ததாகவோ தெரியவில்லை..இதற்கு என்ன பதில் டி.ஜி.பி.சார்?

அம்மாவின் கரங்கள் வன்முறையாளர்களுக்கு இரும்புக்கரமாக இருந்திருக்குமானால், ஆடிட்டர் ரமேஷும், வெள்ளையப்பனும், உயிர்ப்பலி ஆகியிருக்கமாட்டார்கள்.அல்லவா..

வன்முரையாளர்கள் மீது உங்கள் மென்மையான அணுகுமுறையே தொடர்கிறது..இத்ற்கு ஆதாரமாக கோவையில் எங்களால் பலசம்பவங்களை சுட்டிக்காட்டமுடியும்..இதில் நாங்கள் மட்டுமல்ல "உங்களின் பலர், பெரிய அதிகாரிகள் " உட்பட– பாதிக்கப்பட்டது உங்களுக்கு தெரியாதா டி.ஜி.பி.சார்?.

நறுக்கென்று…இரணடு விஷயங்களை உங்களிடம் எதிர்பார்க்கிறேன்..டி ஜி பி சார்..

1.கொலைகாரர்களை—அதாவது..உண்மைகொலைகாரர்களை—உடனே கைது செய்யுங்கள்..

2.குஜராத்தில் இதே வன்முறையாளர்கள் "கப்சிப்" என இருக்கும் போது இங்கேயும் அவர்களை அடக்கி உட்கார வைக்க உங்களால் முடியாதா?—

மோடி என்ன கடவுளா/–அவரால் முடியும் போது அவரைவிட அனுபவம் வாய்ந்த உங்கள்  அம்மாவாலும், முடியும் அல்லவா?,

உங்கள் "ரெபுடேஷனுக்கு" இனி அறிக்கை விடாதீர்கள்..உங்களால் முடியும்..செய்துகாட்டுங்கள்..நாங்கள் உங்களை நம்புகிறோம்

நன்றி ; எஸ்.ஆர். சேகர் எம்.ஏ.பி.எல்

பாஜக மாநிலப் பொருளாளர்

Leave a Reply