பாஜக ஆட்சிக்குவந்தால் இந்தியா மீண்டும் வளர்ச்சிபாதைக்கு திரும்பும் பா.ஜ.க தலைவர் ராஜ்நாத்சிங் அமெரிக்க சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் நியூயார்க்கில் தெரிவித்ததாவது: உலகின் மிக பெரிய பொருளாதாரவல்லரசாக இந்தியாவிற்கு சாத்தியக் கூறுகள் உள்ளன. தற்போதைய சூழலில் இந்தியாவின் பொருளாதார நிலை சாதகமாக இல்லை. ஆனால் அது மிகப் பெரிய அளவில் உயருவதற்கான வாய்ப்பு உள்ளது.

நடப்பு பற்றாக் குறை, மற்றும் பணவீக்கம் ஆகிய இரண்டும் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.,கூட்டணியில் அதிகரித்துள்ளது. தற்போது மக்கள் இந்தியாவின் வளர்ச்சி முடிவடைந்து விட்டதாக நினைக்கின்றனர். ஆனால், மீண்டும் பாஜக ஆட்சிக்குவந்தால் இந்தியா மீண்டும் வளர்ச்சிபாதைக்கு திரும்பும் என நான் நம்புகிறேன். என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply