கொலை வழக்கில் உண்மைகளை மூடிமறைத்து  முயற்சி ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் உண்மைகளை மூடிமறைத்து மக்களைத் திசைதிருப்ப முயற்சிகள் நடப்பதாக மாநில பா.ஜ.க தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர்பேசுகையில், பா.ஜ.க., இந்துமுன்னணி தலைவர்கள் குறித்து தமிழக காவல் துறை இயக்குநர் வெளியிட்ட அறிக்கைமூலம் உண்மைகளை மூடிமறைக்க முயல்வதாக தெரிகிறது. தனிப்பட்டபகையில் கொலை நடந்ததாக கூறி, மக்கள் திசைதிருப்ப முயற்சி நடக்கிறது. ஆனால் மக்கள் உண்மைகளை அறிந்துள்ளனர்.

குறிவைத்து தாக்கப்படுவதை தமிழகம் முழுவதும் மக்கள் இன்று கண்டனம்தெரிவிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். காவல் துறை சரியான முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது, மக்களின் உணர்வாக உள்ளது . கொலைக்கான சதித் திட்டங்கள் சிறையிலேயே தீட்டப்படுகிறது. காவல் துறை விழிப்புடன் செயல் பட்டிருந்தால் கொலைகளை தடுத்திருக்க முடியும் என்றார்.

Leave a Reply