நரேந்திர மோடி பீகாரின் நாலந்தாதொகுதியில் போட்டியிடவேண்டும் குஜராத் முதல்வர், நரேந்திரமோடி, குஜராத்தை விட்டு, பிறமாநிலங்களில் போட்டியிட விரும்பினால், பீகாரின் நாலந்தாதொகுதியில் போட்டியிடவேண்டும்; பீகார் முதல்வர், நிதிஷ்குமாரின் சொந்ததொகுதியான நாலந்தாவில், மோடிக்கு ஆதரவு அதிகம் உள்ளது, என்று பீகார் மாநிலத்தைச் சேர்ந்த, பாஜக முக்கிய தலைவர், சி.பி.தாக்கூர் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க, தேர்தல் குழுத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, உ.பி.,யின் , வாரணாசி மற்றும் லக்னோ தொகுதிகளில் போட்டியிடவேண்டும் என, பாஜக.,வினர் விரும்புகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து, பா.ஜ.க., மூத்த தலைவர்களில் ஒருவரான, சிபி.தாக்கூர் கூறியதாவது:நாலந்தாதொகுதியில், மோடிக்கு ஆதரவுபலமாக உள்ளது. குஜராத்தைவிட்டு, பிற மாநிலங்களில் உள்ள, ஏதாவது ஒருதொகுதியில் போட்டியிட வேண்டும் என, மோடி விரும்பினால், பீகாரின் நாலந்தாவில் போட்டியிடவேண்டும் என்று அவர் கூறினார்.

Leave a Reply