மத்தியில் ஆட்சிக்குவந்தால் தெலங்கானா தனிமாநிலம் அமைத்து தரப்படும் தெலங்கானா தனிமாநிலம் அமைக்கும் பிரச்னையில் மத்திய அரசு சிக்கித்தவித்து வரும் நிலையில், தெலங்கானாவுக்கு பாஜக ஆதரவுதெரிவித்துள்ளது.

தெலங்கானா தனிமாநிலத்தை ஏற்படுத்த துரிதமாக நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை பாஜக வலியுறுத்தியுள்ளது. பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத்சிங் தில்லியில் செய்தியாளர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியது:

தெலங்கானா தனிமாநில கோரிக்கைக்கு நாங்கள் ஆதரவு தருகிறோம். மத்தியில் ஆட்சிக்குவந்தால் தெலங்கானா தனிமாநிலம் அமைத்து தரப்படும் என பாஜக உறுதி அளித்துள்ளது. அதற்குமுன்பாகவே மத்திய அரசு உடனடியாக இதை நிறைவேற்றி கொடுக்கவேண்டும். இந்த விஷயத்தில் மத்திய அரசு ஊசலாட்டத்தில் உள்ளது என ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.

Leave a Reply