மோடி போன்ற இரும்புமனிதர் பிரதமராக வரவேண்டும் மோடி போன்ற இரும்புமனிதர் பிரதமராக வரவேண்டும், நாட்டை காப்பாற்றவேண்டும் என்று இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராமகோபாலன் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது ; இந்திய எல்லையில் சீனா வாலாட்டுகிறது. ஆனால் நமதுபிரதமர் கண்டனம்மட்டும் செய்கிறார். அதனை சீனா கண்டு கொள்ளவில்லை. அதனை நம்மால் தடுக்கமுடியும். அந்த தடுக்கும் சக்திதான் நரேந்திர மோடி. இவர் நாட்டில் பிரதமராக வரத்தான்போகிறார். மோடி போன்ற இரும்புமனிதர் பிரதமராக வரவேண்டும், நாட்டை காப்பாற்றவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.

இன்று கடவுளேகிடையாது என்பவர்கள் திருப்பதி, பழனி கோவில்களில் திருட்டுத்தனமாக சாமிகும்பிட்டு கொண்டிருக்கிறார்கள். நமக்கு மிகப் பெரிய எதிரி தீண்டாமை, சாதிசண்டை தான். இதனை ஒடுக்க நாம் ஒன்று படுவோம் என்று அவர் கூறினார்.

Leave a Reply