பாஜக முஸ்லிம்களுக்கு எதிரானதுபோன்ற மாயையை, காங்கிரஸ் ஏற்படுத்திவருகிறது பாஜக முஸ்லிம்களுக்கு எதிரானதுபோன்ற மாயையை, காங்கிரஸ் ஏற்படுத்திவருகிறது. ஆனால், உண்மையில் பாஜக முஸ்லிம்களுக்கு எதிரானகட்சியல்ல என்று பாஜக முன்னாள் தலைவர் நிதின்கட்காரி கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது ; வங்க தேசத்திலிருந்து ஏராளமானோர், வடகிழக்கு மாநிலங்கள் வழியாக, இந்தியாவுக்குள் ஊடுருவிவருகின்றனர்; அவர்களை கட்டுப்படுத்த, மத்திய அரசு எந்தநடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், இன்னும், பத்தாண்டுகளில், அசாம்மாநிலத்தின் முதல்வர், வங்க தேசத்தை சேர்ந்தவராக இருந்தாலும் ஆச்சர்யப்பட தேவையில்லை.

பா.ஜ.க, முஸ்லிம்களுக்கு எதிரானகட்சி என்ற மாயையை காங்கிரஸ் ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்கள் அல்ல. காங்கிரஸ் செய்வதுபோல், அவர்களை நாங்கள், “தாஜா’ செய்யவும்மாட்டோம்; எங்களைப்பற்றி கூறப்படுவது போல், வேறுபடுத்திப் பார்க்கவும்மாட்டோம். அடுத்து நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்படுவோம் என்று , காங்கிரஸ் மற்றும் சிலகட்சிகள் கூறுவதில் உண்மையில்லை.

நாட்டின்வளங்களை காங்கிரஸ் தலைமையிலான, ஐ.மு.,கூட்டணி அரசு கொள்ளையடிக்கிறது. விரைவில், கஜானாகாலியாகும் நிலை ஏற்பட உள்ளது; நம் நாட்டு தங்கத்தை வெளிநாடுகளில் அடகுவைக்க வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு, கட்காரி பேசினார்

Leave a Reply