மக்களவைக்கு இந்த வருடமே தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது மக்களவைக்கு இந்த வருடமே தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது என பா.ஜ.க. எதிர்க் கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.

பாஜக மகளிர் அணியின் தேசியசெயற்குழு கூட்டம் தில்லியில் திங்கள் கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மாஸ்வராஜ் பேசியதாவது:

மக்களவைக்கும், சிலமாநிலங்களில் சட்டப் பேரவைக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. மக்களவைக்கு இந்த ஆண்டே தேர்தல் வரவாய்ப்புள்ளது. எனவே, பெண்தொண்டர்கள் இப்போதே பிரசாரத்தில் ஈடுபடவேண்டும். பாஜக ஆளும் மாநிலங்களில் அதன் சாதனைகளையும், காங்கிரஸ் ஆளும்மாநிலங்களில் அதன் தோல்விகளையும் விளக்கி பெண்தொண்டர்கள் பிரசாரத்தில் ஈடுபடவேண்டும். மத்திய அரசின் ஊழல்கள், பலதுறைகளில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகள் குறித்தும் விளக்கவேண்டும்.

பெண்களிடம் பிரசாரம் மேற்கொள்ளும்போது மகளிர் அணியினர் நடைமுறைக்கேற்ற அணுகு முறையை கடைப்பிடிக்க வேண்டும். நீங்கள் சந்திக்கும்பெண்கள் உயர்குடியை சேர்ந்தவராக இருந்தாலும், குடிசைப்பகுதியை சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களின் கஷ்டங்கள் பற்றிதான் பேசவேண்டும். உதாரணமாக கால்சென்டரில் பணிபுரியும் பெண்களை சந்தித்தால், அவர்களின் பாதுகாப்பு பிரச்னை பற்றி விவாதிக்கவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply