:உ.பி..,மாநில அரசு, ஓட்டுவங்கிக்காக ஐஏஎஸ்.அதிகாரியை  சஸ்பெண்ட் செய்துள்ளது உ.பி..,மாநிலத்தில் உள்ள அரசு, ஓட்டுவங்கி அரசியலுக்காக ஐஏஎஸ்.அதிகாரி துர்காசக்தி நக்பால் சஸ்பெண்ட் செய்ய பட்டுள்ளார்.என்று பாஜக., மூத்த தலைவர் அருண்‌ஜேட்லி தெரிவித்துள்ளார்.

துர்காசக்தி நக்பால், என்ற பெண் ஐஏஎஸ்., அதிகாரி, கவுதமபுத்தா நகர் பகுதியில்,10 மாதங்களுக்கு முன், உதவிகலெக்டராக நியமிக்கப்பட்டார். பதவியேற்றதுமே, அப்பகுதியில், நீண்டகாலமாக அராஜகத்தில் ஈடுபடும், மணல்மாபியாக்கள் மீது, அதிரடி நடவடிக்கை எடுத்தார். மணல் மாபியாக்களை, கைதுசெய்து, உள்ளே தள்ளினார். இதனால், துர்காவுக்கு, பொதுமக்கள் பாராட்டுதெரிவித்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம், உ.பி., மாநிலஅரசு, துர்காவை அதிரடியாக சஸ்பெண்ட்செய்தது. ஒரு மசூதியின் சுவரை சுவரை இடித்ததர்க்காக சஸ்பெண்ட் செய்ததாக , மாநில அரசு தெரிவித்தது. இதற்கு மாநிலம்முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது.

அனைவரும் அந்த ஐஏஎஸ். அதிகாரி நேர்மையானவர் என தெரிவிக்கின்றனர். பிறகு சஸ்பெண்ட்செய்ய என்ன காரணம். ஓட்டுவங்கி அரசியலுக்காக ஐஏஎஸ். அதிகாரியை சஸ்பெண்ட் செய்துள்ளது என்று பாஜக மூத்த தலைவர் அருண்ஜெட்லி குற்றம் சுமத்தினர் .

Leave a Reply